LOADING...
தமிழகத் தேர்தல் 2026: 84.35% வாக்குப்பதிவுடன் புதிய வரலாறு! முறியடிக்கப்பட்டது 2021-ன் சாதனை!
தமிழகத் தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை

தமிழகத் தேர்தல் 2026: 84.35% வாக்குப்பதிவுடன் புதிய வரலாறு! முறியடிக்கப்பட்டது 2021-ன் சாதனை!

எழுதியவர் Vasuki
Apr 23, 2026
07:50 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத வகையில், மாநிலம் முழுவதும் சராசரியாக 84.35 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட இந்த முறை சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாகத் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். வாக்குப்பதிவின் இறுதி நிலவரங்கள் மற்றும் மாவட்ட வாரியான சதவீதம் வெளியாகியுள்ளது.

அதிக வாக்கு பதிவு

கடந்த தேர்தலை விட அதீத எழுச்சி

தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.73 கோடியாக உள்ள நிலையில், இன்று நடைபெற்ற விறுவிறுப்பான வாக்குப்பதிவில் மொத்தம் 4.83 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதமான 73.63%-ஐ விட மிக அதிகமாகும். கடந்த தேர்தலை ஒப்பிடுகையில், இந்த முறை 20 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியிருப்பது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

அதிக வாக்குப்பதிவு

வாக்குப்பதிவில் கலக்கிய டாப் 5 மாவட்டங்கள்

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் வழக்கம் போல வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாகக் கரூர் மாவட்டம் மாநிலத்திலேயே அதிகபட்ச வாக்குப்பதிவைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கரூர்: 91.78% சேலம்: 90.09% தருமபுரி: 89.77% ஈரோடு: 89.67% நாமக்கல்: 89.39%

Advertisement

குறைவான வாக்குப்பதிவு 

குறைவான வாக்குப்பதிவு பெற்ற மாவட்டங்கள்

அதிகப்படியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட போதிலும், சில தென் மாவட்டங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் வாக்குப்பதிவு சதவீதம் மாநில சராசரியை விடக் குறைவாகவே இருந்துள்ளது. கன்னியாகுமரி: 75.35% சிவகங்கை: 76.01% ராமநாதபுரம்: 76.10% திருநெல்வேலி: 77.37% நீலகிரி: 78.29% தூத்துக்குடி: 79.63% வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM) சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. தமிழகத்தின் அடுத்த ஐந்தாண்டு கால விதியைத் தீர்மானிக்கப்போகும் இந்த 'மகா தேர்தல்' முடிவுகள் வரும் மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ளன.

Advertisement