NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரயிலில் வேலூர் செல்லும் தமிழக முதல்வர்-'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம் துவக்கி வைப்பு
    இந்தியா

    ரயிலில் வேலூர் செல்லும் தமிழக முதல்வர்-'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம் துவக்கி வைப்பு

    ரயிலில் வேலூர் செல்லும் தமிழக முதல்வர்-'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம் துவக்கி வைப்பு
    எழுதியவர் Nivetha P
    Feb 01, 2023, 03:16 pm 1 நிமிட வாசிப்பு
    ரயிலில் வேலூர் செல்லும் தமிழக முதல்வர்-'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம் துவக்கி வைப்பு
    வேலூர் செல்லும் தமிழக முதல்வர்-'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம் துவக்கி வைப்பு

    வேலூர்: 'களஆய்வில் முதலமைச்சர்' என்னும் திட்டத்தின்கீழ் அரசு முறை சுற்றுப்பயணமாக 2நாட்கள் தமிழக முதல்வர் அவர்கள் பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை சென்னையில் இருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு 12மணியளவில் காட்பாடி ரயில்நிலையம் வரும் முதல்வருக்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படும். அங்கிருந்து காரில் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளிக்கு செல்லும் அவர் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுதிட்டம், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 196சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட 2381ஊராட்சி ஒன்றிய,தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 5,351 புது வகுப்பறைகள் கட்டும் திட்டத்தை அடிக்கல் நாட்டி துவங்கி வைக்கிறார். இதில் வேலூர் மாவட்டத்தில் ரூ.15.96கோடி மதிப்பில் 114வகுப்பறை கட்டும் திட்டமும் அடங்கும்.

    ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் தமிழக முதல்வர்

    இதனைதொடர்ந்து, வேலூர் விஐடி பல்கலைக்கழகம் அண்ணா அரங்கில் இன்று மாலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைக்கவுள்ளார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக காணொளி கூட்டரங்கில் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடுகிறார். தொடர்ந்து, வேலூரில் தனியார் ஹோட்டலில் தங்கும் முதல்வர், நாளை(பிப்.,2) காலை அரசு அலுவலகம் ஏதேனும் ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அதன் பின், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார். இதில் அமைச்சர்கள் மற்றும் அரசு துறை செயலாளர்கள் பங்குபெறுகிறார்கள். இது முடிந்த பிறகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு சென்று மதிய உணவிற்கு பிறகு முதல்வர் ரயிலில் சென்னை திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    மு.க.ஸ்டாலின்
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்

    மு.க.ஸ்டாலின்

    ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு
    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் பாமக
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு தமிழ்நாடு
    ஈரோடு இடைத்தேர்தல் - வரும் 24ம் தேதி பிரச்சாரத்தில் களமிறங்குகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு

    மாவட்ட செய்திகள்

    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023