LOADING...
செப்டம்பர் 17 முதல் 6 - 8 ஆம் வகுப்புகளுக்குக் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு
6 - 8 ஆம் வகுப்புகளுக்குக் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

செப்டம்பர் 17 முதல் 6 - 8 ஆம் வகுப்புகளுக்குக் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 15, 2026
07:03 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் முக்கிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை' மேலும் விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தற்போது அரசுப் பள்ளிகளில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட்டு வரும் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை' இனி 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்திட முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ஆய்வு

துறைச் செயல்பாடுகள் குறித்து தீவிர ஆய்வு

இந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார். குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோரது நலனிற்காகச் செயல்படுத்தப்பட்டுவரும் காப்பகங்கள், இல்லங்கள் மற்றும் சமூக சட்டங்களின் அமலாக்கம், அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் சத்துணவு மையங்களின் தற்போதைய நிலை, பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள், தத்தெடுக்கும் மையங்கள் மற்றும் மகளிர், குழந்தைகள், மூத்தகுடிமக்களுக்கான அவசர உதவி எண்களின் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தார்.

Advertisement