Page Loader
பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு
ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்யப்படும் பருவதமலை

பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு

எழுதியவர் Nivetha P
Jan 05, 2023
06:29 pm

செய்தி முன்னோட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி தென்மகாதேவ மங்கலத்தில் 4,560 அடி உயர பர்வதமலை அமைந்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் மல்லிகார்ஜுனேஸ்வரர் உடனுறை பிரம்மராம்பிகை கோயில் உள்ளது. இந்த கோயிலை 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற மன்னர் கட்டினார் என்று கூறப்படுகிறது. இங்குள்ள அம்மன் மற்றும் சிவனுக்கு பக்தர்களே தங்கள் கைகளால் அபிஷேகம் செய்து வழிபடலாம். பவுர்ணமிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு செங்குத்தான மலை பாதையில் ஏறி வந்து இரவு தங்கி, சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கரடு முரடான செங்குத்தான இந்த மலையில் சிரமப்பட்டு ஏறும் பொழுது சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது.

ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு

உயிரிழப்பை தவிர்க்க சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க அறநிலையத்துறை முடிவு

உயிரிழப்புகளை தவிர்க்கவும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாகவும் மலை மேல் வாகனம் செல்ல சாலை வசதி மற்றும் ரோப் கார் அமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதை அமைப்பதற்கான வழித்தடத்தை ட்ரோன் என்னும் ஆளில்லா கேமராக்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில், இந்து சமய அறநிலையத்துறை செயற்பொறியாளர் அன்பரசன் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து சென்றபோது கீழே விழுந்த ஒரு பகுதியே பர்வதமலை என்றும், பார்வதி தேவி ஈசனின் உடலில் இடபகுதி வேண்டி இம்மலையின் அடிவாரத்தில் பச்சையம்மனாக தவமிருந்ததால் பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது என்றும் புராணத்தில் பல தகவல்கள் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.