உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை திங்கள் கிழமை (ஜூலை 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னை மாவட்டம்: கிருஷ்ணா நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகை நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் தெற்கு மற்றும் ஸ்ரீராம் நகர் பகுதிகள்.
கோயம்புத்தூர் மாவட்டம்: பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயண புரம், பள்ளபாளையம் (EB ஆபீஸ் பகுதி), காரவல்லி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர், காமாட்சிபுரம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் (சில பகுதிகள்), சுண்டமேடு (சில பகுதிகள்), கொல்லuபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ரம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம், ஐயர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்ஃபால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ஹைஃபாரஸ்ட், சோலையார்நகர், முடிஸ், சின்கோனா, பன்னிமேடு, மணப்பள்ளி மற்றும் காடம்பாறை.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருப்பூர் மாவட்டம்: சிங்கம்பன்புதூர், கொம்பகன்புதூர், ராயன் நகர், பெட்டபுச்சிபாளையம், கோதுபண்டிபாளையம், ஆதர்ஷ், கருகம்பாளையம், வைகிங் மற்றும் டி.ஆர்.கே (Viking & TRK), ஜெகத்குரு, எஸ்.எம்.பி, வி.எஸ்.எம், ஆர்.பி வோவன், செட்டிபாளையம் பீடர், பச்சப்பாளையம், காங்கேயம் சாலை பகுதிகள், மில் பீடர், சுக்குட்டிபாளையம், வெள்ளமடை, வாட்டர் ஒர்க்ஸ் பகுதி, கே.பி. கிராமம், அரச்சலூர், சிவன்மலை, மருதுறை, கூட்டம்பாளையம் மற்றும் நாதக்கடையூர்.
திண்டுக்கல் மாவட்டம்: ரமணநாயக்கன்பட்டி, எழுவம்பட்டி மற்றும் மஞ்சளாறு அணை பகுதிகள்.
பெரம்பலூர் மாவட்டம்: திருவிளக்குறிச்சி, தேரணி, காரை பீடர் பகுதிகள், இரூர் பீடர் பகுதிகள் மற்றும் ஆவின் பீடர் பகுதிகள்.