குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் 74வது குடியரசு தினம் வரும் ஜனவரி 26ம் தேதி, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபக்தா எல் சிசி கலந்துகொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியையேற்றி நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
இதில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் இந்த குடியரசு தினவிழாவில், காவலர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டிற்கான விருது பெறும் காவலர்கள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
21 தமிழக காவல்துறையினர்
குடியரசு தலைவரின் 'மெச்சத்தக்க சேவை'க்கான விருது
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர்களுக்கான ஜனாதிபதி விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஎஸ்பி. பொன் ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவி சேகரன் ஆகியோருக்கு இந்த ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜன.,26) நாடுமுழுவதும் குடியரசு தினம் கொண்டாடவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியிலும் மற்ற முக்கிய இடங்களிலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.