
கேரளா மாநிலத்தில் உலகின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம்
செய்தி முன்னோட்டம்
பழங்காலத்தில் ஓலைச்சுவடிகள் மூலம் முக்கிய குறிப்புகளை நம் முன்னோர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
பனை மரத்தில் உள்ள ஓலைகளை தனித்தனியே பிரித்து, ஒத்த அளவாக உள்ள ஓலைகளை தேர்ந்தெடுத்த எழுத பயன்படுத்துவர். பனை ஓலைகளின் மேற்பரப்பு கடினமானதாக இருப்பதால் பதப்படுத்தாமல் ஓலைகளில் எழுத முடியாது.
அவற்றை எழுதுவதற்கு தக்கவாறு மிருதுவாக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஓலைகளை பதப்படுத்துவதன் மூலம் அவற்றை விரைவில் அழியாமலும், பூச்சிகளால் அரிக்கப்படாமலும் பாதுகாக்கலாம்.
இதற்காக பல வழிமுறைகளை நம் முன்னோர் கையாண்டுள்ளனர். அதனாலேயே, அக்காலத்தில் எழுதப்பட்ட சுவடுகள் தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு 'ஓலைச்சுவடி' என்று அழைக்கப்பட்டு நாளடைவில் 'ஓலை' என்றும், 'சுவடி' என்றும் இரண்டு பெயர்களை பெற்று விளங்குகிறது.
1.5கோடி ஓலைச்சுவடிகள்
கேரள அரசின் ஆவணத்துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் பனை ஓலை காட்சியகம்
இவ்வளவு சிறப்புமிக்க ஓலைச்சுவடிகள் குறித்த முக்கியத்துவத்தை தற்போதைய காலக்கட்டத்தினர் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு ஏதுவாக கேரளா மாநிலத்தில் ஓலைச்சுவடி அருங்காட்சியகம் நடைபெறுகிறது.
கேரள அரசின் ஆவணத்துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் திருவனந்தபுரத்தில் பனை ஓலை சுவடி அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.
இது உலகின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம் ஆகும்.
நிலம்-மக்கள், போர்-அமைதி, கல்வி-சுகாதாரம், பொருளாதாரம், கலை-இலக்கியம், கேரளாவின் எழுத்து வரலாறு, நிர்வாகம் உட்பட 8 பிரிவுகளின் கீழ், பனைஓலை சுவடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.