சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க முயற்சி - உலகளவில் 5 ஆம் இடத்தில் இந்தியா
2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளை கடந்த வருடமே தமிழக அரசும் செய்து வந்தது. இந்நிலையில் உலகளவில் சிறுதானியங்கள் உற்பத்தில் 5வது இடத்தில் உள்ளது என, இந்தியா முன்மொழியப்பட்ட நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் இந்தாண்டு பலவிதமான மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அமினோ அமில விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்கள் அதிக நன்மைகள் கொண்டதாகும். இந்தியாவில் 2021-22ம் ஆண்டில் சமீபத்திய அதிகாரபூர்வ தரவுகளின் படி, 14.89 லட்சம் பள்ளிகளில் 26.52 கோடி குழந்தைகள் தொடக்க நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
பள்ளி குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பயனாளர்களுக்கு தினமும் சூடான சத்தான உணவு
இதனையடுத்து தற்போது பள்ளிகளில் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டுவருகிறது. சிறுதானியங்கள் குழந்தைகளின் உணவில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதால், பள்ளிகுழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பயனாளிகளுக்கு தினமும் ஒரு சத்தான உணவு வழங்கப்படுகிறது. கம்பு, வரகு, ராகி, குதிரைவாலி, திணை போன்றவற்றுடன் 150மிலி கிளாஸ் பால் மற்றும் ஒரு முட்டை வழங்கப்படுகிறது. இதனால் மில்லியன் கணக்கான சிறுதானிய விவசாயிகளுக்கு, கோழிபண்ணை உரிமையாளருக்கு உற்பத்தி பெருகுகிறது, ஊக்கமளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதான் மந்திரி போஷன், சக்தி நிர்மான் மற்றும் சஷம் அங்கன்வாடி & போஷன்2.0 ஆகிய இரண்டு திட்டங்கள் பிரதானமாக உள்ளன. 2022-23ம் ஆண்டு ரூ.30,496.82 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிக சிறுதானியங்கள் சேர்ப்பதன் மூலம் திட்டத்தை சிறப்பாக பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.