மிக உயரமான சியாச்சின் போர்க்களத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ வீராங்கனை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், இமயமலை தொடரில் அமைந்துள்ளது சியாச்சின் சிகரம். இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியான சியாச்சினில் தான் உலகத்திலேயே அதிக உயரமான ராணுவ நிலை அமைந்துள்ளது. 1984ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினர் சியாச்சின் சிகரத்தில் மோதி கொண்ட பிறகு, அப்பகுதியில் இந்திய ராணுவப்படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்திய ராணுவத்தின் 'ஃபயர் அண்ட் ஃப்யூரி கார்ப்ஸ்'பிரிவை சேர்ந்த கேப்டன் சிவா செளஹான் என்ற முதல் பெண் வீராங்கனை பணியமர்த்தப்பட்டுள்ளார். 15,632 அடியில் உள்ள உலகின் மிக உயரமான போர்க்களமான குமார் போஸ்ட்டில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ வீராங்கனை கேப்டன் சிவா செளஹான் ஆவார்.
முதல் பெண் ராணுவ வீராங்கனை கேப்டன் சிவா செளஹானுக்கு குவியும் வாழ்த்துக்கள்
முதல் பெண் ராணுவ வீராங்கனை கேப்டன் சிவா செளஹான் பல்வேறு கடின பயிற்சிகளுக்கு பிறகே இந்த பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்று ராணுவத் துறையினர் தெரிவித்துள்ளார்கள். உலகின் உயரிய போர்க்களத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் முதல் பெண் ராணுவ வீராங்கனையான கேப்டன் சிவா செளஹான் அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. இமய மலை மீதுள்ள ஆண்டு முழுவதும் பனி கட்டிகளால் நிறைந்து காணப்படும் இந்த சியாச்சின் பனிமலை தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர் ஏற்பட்டதுக்கு காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.