Loading...
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக வெளியான தகவல்! அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு குறித்து விளக்கம்
அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு குறித்து சுகாதாரத்துறை விளக்கம்

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக வெளியான தகவல்! அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு குறித்து விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 19, 2026
07:31 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து, டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. நடப்பாண்டில் இதுவரை மாநிலத்தில் 16,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்ததாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர் உயிரிழப்பு

மாணவர் ஹரிஷ் குமார் உயிரிழப்பு மற்றும் மருத்துவமனை விளக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கி படித்து வந்த மாணவர் ஹரிஷ் குமார் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அம்மாணவர் டெங்குவால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், அதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

மாணவருக்கு நடத்தப்பட்ட இரத்த பரிசோதனையில் டெங்கு உறுதி செய்யப்படவில்லை என்றும், தீவிர காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை பெறாததால் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சுகாதாரத்துறை

சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ புதிய விளக்கம்

மாணவர் உயிரிழப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புதிய விளக்கத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தது டெங்கு காய்ச்சலால் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

அம்மாணவர் ஸ்க்ரப் டைபஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் வேறு யாருக்காவது இந்த பாதிப்பு உள்ளதா என்பது குறித்து தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT