LOADING...
ரசகுல்லாவுக்காக மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே வெடித்த மோதல்; திருமணம் பாதியில் நிறுத்தம்
ரசகுல்லாவுக்காக மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே வெடித்த மோதல்

ரசகுல்லாவுக்காக மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே வெடித்த மோதல்; திருமணம் பாதியில் நிறுத்தம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 05, 2025
07:31 pm

செய்தி முன்னோட்டம்

பீகாரின் புத்தகயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நவம்பர் 29 அன்று, திருமண விழாவின் போது ரசகுல்லாவுக்காக மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட கடுமையான சண்டை, திருமணத்தை நிறுத்தும் அளவிற்குச் சென்றது. திருமணச் சடங்குகள் தொடங்குவதற்குச் சற்று முன்பு உணவுக் கூடத்திற்குச் சென்ற இருதரப்பு உறவினர்கள் மத்தியில், இனிப்புக் கவுண்டரில் ரசகுல்லா தீர்ந்து போனதால் வாய்த் தகராறு ஏற்பட்டது.

சமாதான முயற்சி

சண்டையும் சமாதான முயற்சிகளும்

சாதாரண வார்த்தை மோதலாகத் தொடங்கியது, விரைவில் நாற்காலிகள் மற்றும் சமையலறைப் பாத்திரங்களால் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு வன்முறைச் சண்டையாக மாறியது. இதனால் மண்டபம் முழுவதும் குழப்பம் ஏற்பட்டது. திருமண விழாவில் சண்டை நடந்ததைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சம்பவம் குறித்த தகவலை அறிந்த காவல்துறை அங்கு வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியது. திருமணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்த மணமகனின் உறவினர், உணவுக்காக ஏற்பட்ட சிறு தகராறு எதிர்பாராத விதமாகப் பெரும் சண்டையாக மாறியதாகத் தெரிவித்தார்.

திருமணம்

திருமணத்தை மறுத்த மணமகள் தரப்பு

காவல்துறையின் தலையீடுக்குப் பிறகும், மணமகள் தரப்பினர் திருமணத்தை நடத்த மறுத்துவிட்டனர். சமூகம் மற்றும் உறவினர்கள் சண்டையைத் தீர்க்க பல முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், மணமகள் குடும்பத்தினர் நகைகளை எடுத்துக்கொண்டு மணமகளுடன் திருமண இடத்திலிருந்து வெளியேறி விட்டனர். மணமகன் தரப்பு திருமணத்தை நடத்த விரும்பினாலும், மணமகள் குடும்பத்தினர் இதுவரை திருமணத்தைத் தொடரச் சம்மதிக்கவில்லை. இந்தச் சண்டையால், நிச்சயிக்கப்பட்ட திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Advertisement