
தொலைக்கட்சியில் வெளியாக இருக்கும் விமலின் 'விலங்கு' வெப் சீரீஸ்
செய்தி முன்னோட்டம்
2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது 'விலங்கு' வெப் சீரிஸ்.
இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளரான பிரசாத் பாண்டிராஜ் இந்த வலைத்தொடரை இயக்கியுள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார். இவர்களுடன் இனியா, முனீஷ்காந்த், பாலசரவணன், ரேஷ்மா, ஆர்.என்.ஆர். மனோகர் போன்றோர் நடித்துள்ளனர்.
இந்த தொடருக்கு அஜீஷ் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தம்மன் இத்தொடருக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குனராக துரை ராஜ் அவர்கள் பணியாற்றிள்ளார்.
7 எபிசோடுகளாக எடுக்கப்பட்ட இந்த வலைத்தொடர் ஒரு க்ரைம் திரில்லர் கதையாகும்.
இது திருச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட தொடர் என கூறப்படுகிறது.
‘விலங்கு’
மாறுப்பட்ட கதைகளத்தை கொண்ட 'விலங்கு' தொடர்
திருச்சியில் உள்ள வேம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ பரிதி கதாபாத்திரத்தில் விமல் நடித்திட்டுள்ளார்.
இவர் மனைவியின் பிரசவத்திற்காக விடுப்பு எடுக்கும் நிலையில், பாதி சிதைந்த சடலம் பற்றிய மர்மமான வழக்கு ஒன்று வருகிறது.
அதனை விமல் விசாரிக்க தொடங்குவதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.
இதில் இவர் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் ஏற்படும் திருப்பங்களே இந்த தொடரரின் கதையாகும்.
மாறுப்பட்ட கதைகளத்தை கொண்ட இந்த தொடர் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த வலைத்தொடர் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது இந்த தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறப்புக் காட்சியாக வரவிருகிறது.
இந்த தொடர் வரும் ஞாயிற்றுகிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பப்படும்.