Page Loader
சென்னை மெட்ரோ ரயிலை அலங்கரிக்கிறது வாரிசு பட போஸ்டர்கள்

சென்னை மெட்ரோ ரயிலை அலங்கரிக்கிறது வாரிசு பட போஸ்டர்கள்

எழுதியவர் Saranya Shankar
Dec 14, 2022
11:42 pm

செய்தி முன்னோட்டம்

ரசிகர்களின் பெரும் ஆவலுடன் 2023-ம் ஆண்டில் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தினை தில் ராஜு தயாரித்து, வம்சி பைடிபைலி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். சரத்​​குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, குஷ்பு, மகேஸ்வரி ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன், சங்கீதா கிரிஷ், சம்யுக்தா சண்முகநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மற்றும் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இது தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விஜய்யின் 48வது பிறந்தநாளன்று வாரிசு என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.

வாரிசு ப்ரோமோஷன்

தீவிரமடையும் வாரிசுப் படத்தின் ப்ரோமோஷன்!

அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளிவர உள்ளது. இப்படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால், படத்தை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் தீவிரமாக விளம்பரப் படுத்தி வருகிறார்கள். படத்தை விநியோகிக்கும் சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிதீவிரமாக முழு விளம்பரப் பிரச்சாரத்தினை செய்து வருகிறது. பிரமிக்க வைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில்களில் இப்படம் பிரமாண்டமாக விளம்பரப் படுத்தப்பட்டு சென்னை முழுவதும் வலம் வருகிறது. இதனை சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோ போஸ்டர்களை வீடியோ எடுத்து தனது அதிகார பூர்வ பக்கத்தில் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ட்விட்டரில் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது. அதன் வீடியோக்கள் சமூகவலைத் தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

மெட்ரோ ரயில்களில் வாரிசு பட போஸ்டர்கள்