Page Loader
ப்ரேமம் படம் தான் கடவுள் எனக்கு கொடுத்த கிப்ட் - சாய்பல்லவி பேட்டி
நடிகை சாய்பல்லவியின் புகைப்படம்

ப்ரேமம் படம் தான் கடவுள் எனக்கு கொடுத்த கிப்ட் - சாய்பல்லவி பேட்டி

எழுதியவர் Saranya Shankar
Jan 05, 2023
06:26 pm

செய்தி முன்னோட்டம்

ப்ரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, மலர் என்ற ஆசிரியையாக, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளும் நடித்து கொண்டு இருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது; "அழகு குணத்தில் இருக்கிறது என்பதை காட்ட விரும்பினேன். அதனால் தான் முதல் படத்தில் சிம்பிளாக நடித்தேன். அதின் எனக்கு உறுதி கிடைத்ததால் அதையே பின் தொடர ஆரம்பித்து விட்டேன். நம்ம வீட்டு பெண் போல இருக்கிறார் என கூறும்போது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. ப்ரேமம் படம் முடித்து 7 வருடமாகிறது. இன்னும் மலர் டீச்சரையே கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். அதை நினைக்கும் போது கஷ்டமாக இருக்கும்.

பேட்டி

"மாணவியாக படித்து கொண்டு இருக்கும்போது மலர் டீச்சராக நடித்தேன்" - சாய்பல்லவி

மலர் கதாபாத்திரத்தை மறக்கடித்து, மக்களுக்கு வேறு கதாபாத்திரத்தை நினைவூட்ட முயற்சிக்கிறேன். எதுவுமே தெரியாமல் நடித்த படம் ப்ரேமம். இந்த அளவிற்கு ரீச் ஆகும் என நினைக்கவில்லை. கடவுள் எனக்கு முன்பு கொடுத்த தோல்விகளுக்கு ப்ரேமம் படம் தான் கடவுள் எனக்கு கொடுத்த கிப்ட். நான் மாணவியாக படித்து கொண்டு இருக்கும்போது மலர் டீச்சராக நடித்தேன். நான் மருத்துவம் படித்தாலும் என் பெற்றோர்கள் என் விருப்பத்தை ஏற்று சினிமாவிற்குள் என்னை அனுமதித்தார்கள். கேமரா முன் நிற்கும் போது எனக்கொரு மகிழ்ச்சி கிடைக்கிறது. அது எனக்கு பிடித்து இருக்கிறது. இன்னும் அதை கொஞ்சம் நாள் அனுபவித்து அதன் பின் மருத்துவத்தை பற்றி யோசிக்கலாம்" என அவர் கூறியுள்ளார்.