பொன்னியின் செல்வன் வலை தொடராக ஸ்ரீகணேஷ் இயக்கி சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்?
பொதுவாக தமிழ் மக்களிடம் தமிழில் மிக சிறந்த நாவல் எது என்ற கேள்வி கேட்டால் பெரும்பாலானோர் பரிந்துரைக்கும் புத்தகம் 'பொன்னியின் செல்வன்' ஆகும். இப்புத்தகத்தை 1950-ம் ஆண்டு வார இதழில் தொடர்கதையாக 'கல்கி' எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. இக்கதைக்கு கிடைத்த மக்களின் ஆதரவு பல்வேறு காலகட்டத்தில் பல பதிப்புகளாக வெளிவந்தன. வெளியான நான்காண்டுகளில், இதழின் விற்பனை விண்ணை முட்டும் அளவிற்குப் பங்களித்தது மட்டுமின்றி, தமிழ் இலக்கியத்தையும் அழியாமல் நிலைநிறுத்தியது. கிட்டத்தட்ட கி.பி. 1000 நூற்றாண்டை சேர்ந்த சோழ பேராசை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கற்பனை கலந்த ஒரு வரலாற்று புத்தகமாகும். இப்புத்தகத்தின் வந்தியத்தேவன், அருண்மொழிவர்மன், குந்தவை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்டு எழுதப்பட்டது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து 'வெப் சீரிஸ்' வர இருக்கிறதா?
புத்தகத்தை மையமாக கொண்டு பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் இயக்கித் தயாரித்தார். இரண்டு பாகமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், செப்டம்பர் மாதம் 2022-ல் பொன்னியின் செல்வன் - முதல் பாகம் மதராஸ் டாக்கீஸ் , லைகா தயாரிப்பகம் ஆகிய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் 2023-ல் வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து பொன்னியின் செல்வன் கதையை 8 தோட்டாக்கள் மற்றும் குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் ஒரு வலை தொடராக (Web series) வர இருப்பதாகவும், இதனை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.