Page Loader
தியேட்டரிலிருந்து  நீக்கம்: ஓடிடி-யில் ரிலீஸ் ஆகுமென இயக்குனர் அறிவிப்பு
நல்ல சமயம் படத்தின் ஒரு காட்சி (படம்: The Hindu)

தியேட்டரிலிருந்து நீக்கம்: ஓடிடி-யில் ரிலீஸ் ஆகுமென இயக்குனர் அறிவிப்பு

எழுதியவர் Saranya Shankar
Jan 05, 2023
06:09 pm

செய்தி முன்னோட்டம்

ஒரு அடார் லவ் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஒமர் லுலு. இவர் சமீபத்தில் நல்ல சமயம் என்ற மலையாள படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு A சான்றிதழ்யினை சென்சார்போர்டு வழங்கியது. 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதியன்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ஒரு இளம் பெண் குட்காவை பயன்படுத்தும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இப்படத்தில் இரட்டை அர்த்தமுடைய வசனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் இளைஞர்களுக்கு போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிப்பதாக கூறி கோழிக்கோடு ரேஞ்ச் எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர் சுதாகரன் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு, படத்தின் தயாரிப்பு நிறுவனமான கலந்தூர் என்டர்டெயின்மென்ட்ஸ் மீதும் மற்றும் இயக்குனர் ஒமர் லுலு மீதும் கடந்த 30-ந்தேதி பதிவாகியுள்ளது.

ஒமர் லுலுவின் பதில்

தயாரிப்பாளரின் நிலை குறித்து ஒமர் லுலுவின் பதிலடி

இதனையடுத்து இப்படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி திரையரங்குகளிலிருந்து நீக்கப்படுதாக ஒமர் லுலு கூறியிருந்தார். தனது பேஸ்புக் பக்கத்தில் "நல்ல சமயம் படத்தை திரையரங்குகளிலிருந்து திரும்பப்பெற்றுக் கொள்கிறோம். மற்ற விஷயங்கள் கோர்ட் தீர்ப்பின்படி..." என பதிவிட்டு இருந்தார். இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி தயாரிப்பாளரின் நிலை குறித்து கருத்து தெரிவித்து இருந்தனர். இதற்கு பதிலளித்த ஒமர் லுலு, "தயாரிப்பாளரின் நிலையை பற்றி என்ன பலர் பதற்றமவாதை அறிந்தேன். நல்ல சமயம் படத்தின் படப்பிடிப்பிற்கு 16 நாட்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு ரூ.1 கோடி செலவானது. தற்போது இந்த படத்திற்கு ஓடிடி அதற்கும் அதிகமான தொகைக்கு கேட்கிறது. கோர்ட் உத்தரவுக்கு பின்ஓடிடி-யில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படும்" என கூறியுள்ளார்.