Page Loader
சாலையோர மக்களுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் செய்த உதவி
விக்னேஷ் சிவன் - நயன்தாரா புகைப்படம்

சாலையோர மக்களுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் செய்த உதவி

எழுதியவர் Saranya Shankar
Jan 04, 2023
06:36 pm

செய்தி முன்னோட்டம்

ஐயா படத்தின் மூலம் சரத்குமார் ஜோடியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. மேலும் இவர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இதன் பிறகு பில்லா, யாரடி நீ மோஹினி, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். சிறிய இடைவேளைக்கு பிறகு 2013-ல் இவர் மீண்டும் ராஜா ராணி படத்தில் நடித்தார். இதனையடுத்து தனி ஒருவன், நானும் ரவுடி தான், நண்பேன்டா, மாயா, வேலைக்காரன், கோலமாவு கோகிலா, விசுவாசம், பிகில், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் பெண்களை மையமாக கொண்டு உருவாக்கப்படும் கதைகளை தேர்தெடுத்து நடித்து கொண்டு இருக்கிறார்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உதவி

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உதவி

இதனிடையே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் அறிவித்து இருந்தார். தற்போது இவரின் கனெக்ட் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. மேலும் இவர் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காட்பாதர் படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரனுக்கு ஜோடியாக கோல்ட் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையம் அருகில் சாலையோரத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளனர். இது புத்தாண்டு தினத்தையொட்டி அவர்கள் இந்த உதவியை செய்துள்ளதாக கூறப்படுகிறது.