Page Loader
'குபேரா': D51 படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
இது தனுஷின் 51வது திரைப்படமாகும்

'குபேரா': D51 படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 08, 2024
06:36 pm

செய்தி முன்னோட்டம்

'குபேரா': தனுஷ், நாகார்ஜூனா இருவரும் நடிக்க, தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வரும் #D51 திரைப்படத்தின் பெயர் வெளியானது. அதோடு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. இது தனுஷின் 51வது திரைப்படமாகும். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளது தேவி ஸ்ரீ பிரசாத். தனுஷிற்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனுஷ் தன்னுடைய 50வது படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ராயன் என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில், தனுஷுடன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், SJ சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை தனுஷே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

embed

#DNS படத்தின் பெயர்

D51 Title look https://t.co/UA9g0jnFzJ #Kubera. @iamnagarjuna @iamRashmika @sekharkammula @ThisIsDSP @AsianSuniel pic.twitter.com/5pdU2DqnHx— Dhanush (@dhanushkraja) March 8, 2024