'டும் டும்' கெட்டி மேளம் முழங்க KPY பிரபலம் தீனாவிற்கு நடந்த திருமணம்!
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றவர் காமெடியன் தீனா. இவருக்கு குடும்பங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உண்டு. கடந்த மாதம் சொந்த வீட்டை கட்டி முடித்த தீனா, தற்போது ஒரு கிராபிக் டிசைனர் பெண்ணோடு திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற இந்த திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். "படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வைக்க முடியவில்லை. திருமண வரவேற்பு நிகழ்வை ஜூன் 10ஆம் தேதி சென்னையில் வைத்துள்ளோம்" என்று தீனா தெரிவித்துள்ளார். மேலும் இவர்களது திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.