மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் 'இஞ்சி வெல்லம்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கும் 'இஞ்சி வெல்லம்' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் விளம்பரப் பணிகள் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், முதல் பாடலான 'ஆச்சி ஆச்சி' நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் அறிவித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து, தனது காந்தக் குரலில் இப்பாடலை பாடியுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் காதல் கதை
கொல்கத்தா ஹவுரா பாலத்தில் படமாக்கப்பட்ட காட்சிகள்
கடந்த ஆண்டு வெளியான 'தக் லைஃப்' திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் மணிரத்னம் மீண்டும் ஒரு அழுத்தமான காதல் கதையை இப்படத்தின் மூலம் கையில் எடுத்துள்ளார்.
2017-இல் வெளியான 'காற்று வெளியிடை' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் முழுநீள காதல் படமான இதன் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் கொல்கத்தாவில் தொடங்கியது.
அங்குள்ள புகழ்பெற்ற ஹவுரா பாலத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி பங்கேற்ற பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட வீடியோ ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ரிலீஸ்
மணிரத்னம் - ரஹ்மான் கூட்டணியின் மற்றுமொரு இசை விருந்து
1992-ஆம் ஆண்டு 'ரோஜா' திரைப்படத்தில் தொடங்கிய மணிரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி, கடந்த ஆண்டு 'தக் லைஃப்' படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை', 'விண்வெளி நாயகா' ஆகிய பாடல்கள் மூலமும் ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்நிலையில், 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ள 'இஞ்சி வெல்லம்' படத்திற்கு அவிக் முகோபாத்யாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் 2027 ஜனவரி 29-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The first single from #InjiVellam has a name ❤️🔥#AachiAachi drops tomorrow 🎵
— Madras Talkies (@MadrasTalkies_) November 24, 2026
Puyalism begins before birth 🎧#ManiRatnam @arrahman @MadrasTalkies_ #Subaskaran @LycaProductions @VijaySethuOffl @Sai_Pallavi92 @sreekar_prasad #AvikMukhopadhayay @ekalakhani #SharmishtaRoy… pic.twitter.com/AVPFsxPT9F