LOADING...
சூர்யா 42: படத்தின் ஹிந்தி உரிமம் ரூ.100 கோடிக்கு விற்பனை
சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’

சூர்யா 42: படத்தின் ஹிந்தி உரிமம் ரூ.100 கோடிக்கு விற்பனை

எழுதியவர் Saranya Shankar
Jan 04, 2023
10:57 am

செய்தி முன்னோட்டம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து கொண்டு இருக்கும் படம் 'சூர்யா 42'. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படபிடிப்பு கோவாவில் நடைபெற்றது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி,கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தினை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு நிகழ்காலத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த படம் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஹிந்தி உரிமம்

படப்பிடிப்பு முடியும் முன்னரே ஹிந்தி உரிமையை வாங்கிய தயாரிப்பாளர்

'சூர்யா 42' படத்தை 2 பாகங்களாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சூர்யா இப்படத்தில் நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு வேலைகளை முடித்து கொண்டு பின்னர் வெளியாகும் என தகவல் வந்துள்ளது. 3D தொழில் நுட்பத்துடன் ரிலீஸ் ஆகும் இந்த படம், மொத்தம் 10 மொழிகளில் வெளிவருகிறது. அதில் தற்போதைய தகவல்களின்படி, சூர்யா 42 படத்தின் ஹிந்தி உரிமையை தயாரிப்பாளர் டாக்டர் ஜெயந்திலால் கடா அவர்கள் பெற்றுள்ளாராம். இந்த உரிமையை இவர் 100 கோடி கொடுத்து வாங்கியுள்ளாராம். இதுமட்டுமின்றி இந்த படத்தின் ஹிந்தி சட்டிலைட், டிஜிட்டல் உரிமையும், தியேட்டர் விநியோக உரிமைகளையும் இவர் பெற்றுள்ளாராம்.