Loading...
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் சர்ச்சை: Uncut வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்த இயக்குநர் சேரன்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக வாட்டர்மெலன் திவாகருக்கு சேரன் பதிலடி கொடுத்துள்ளார்.

வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் சர்ச்சை: Uncut வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்த இயக்குநர் சேரன்

எழுதியவர் Vasuki
Nov 24, 2026
05:07 pm

செய்தி முன்னோட்டம்

சமூக வலைதளங்களில் தன்னை 'வாட்டர்மெலன் ஸ்டார்' என அழைத்துக்கொள்ளும் திவாகர், ஜெயா தொலைக்காட்சியில் இயக்குநர் சேரன் தொகுத்து வழங்கும் 'யார் சரி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தன்னை நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஒப்பிட்டு திவாகர் பேசியதால் சேரன் கடும் அதிருப்தி அடைந்தார். யாருடன் நம்மை ஒப்பிட்டுப் பேசுகிறோம் என்பதில் வரம்பு வேண்டும் எனச் சேரன் அறிவுறுத்தினார். மேலும், தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொள்வதை விடத் திறமையைச் செயல்பாட்டின் மூலம் நிரூபிக்க வேண்டும் எனச் சேரன் கண்டித்ததால் நிகழ்ச்சியிலேயே இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

மிரட்டிய திவாகர்

சேரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக மிரட்டிய திவாகர்

நிகழ்ச்சி முடிந்த பிறகு சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட திவாகர், இயக்குநர் சேரனைக் கடுமையாக விமர்சித்தார்.

தனது அசுர வளர்ச்சியை பார்த்துச் சேரனுக்கு பொறாமை என்றும், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் சேரன் தவிப்பதாகவும் அவர் சாடியிருந்தார்.

அதுமட்டுமின்றி, சேரனுக்கு எதிராக தனது ரசிகர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் திவாகர் பதிவிட்டிருந்தார்.

இந்தச் சர்ச்சை இணையத்தில் பூதாகரமான நிலையில், கடந்த சில நாட்களாக எவ்வித பதிலும் அளிக்காமல் இயக்குநர் சேரன் அமைதி காத்து வந்தார்.

Uncut வீடியோ

Uncut வீடியோ வெளியிட்டு சேரன் பதிலடி

இந்நிலையில், ஒளிபரப்பப்படாத Uncut வீடியோவை வெளியிட்டுள்ள இயக்குநர் சேரன், திவாகரின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டே அந்தக் காட்சிகளை தொலைக்காட்சியில் தவிர்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

"ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதைப் பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான்; அவரைச் சரிசெய்யவே நினைத்தேன். ஆனால் அவரை எந்தக் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது எனத் தெரிந்துவிட்டது" எனச் சேரன் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

பெயரை விட தனது நடத்தைதான் முக்கியம் என சேரன் கூறியுள்ள நிலையில், இந்த Uncut வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

நீங்க எப்ப டாக்டர் ஆனீங்க?

சேரனின் பதிவுக்கு திவாகர் ஆவேசப் பதிலடி

இயக்குநர் சேரனின் இந்தப் பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ள திவாகர், "நான் ஒரு பிசியோதெரபி மருத்துவர்; என்னை மனநோயாளி எனச் சொல்ல நீங்க எப்ப டாக்டர் ஆனீங்க?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சினிமா துறையில் வேறு யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்ற பொறாமையிலும், அகங்காரத்திலும் சேரன் பேசுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், நிகழ்ச்சியில் தன்னை அவமானப்படுத்திய காட்சிகளை எடிட் செய்துவிட்டு, தற்போது நல்லவர் போல நடிப்பதை மக்கள் நம்ப மாட்டார்கள் எனவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT