NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / D50: 100 கோடி ரூபாய் செலவில் உருவாகும் படத்தை இயக்கும் தனுஷ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    D50: 100 கோடி ரூபாய் செலவில் உருவாகும் படத்தை இயக்கும் தனுஷ்
    நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை தானே எடுக்கவுள்ளார்

    D50: 100 கோடி ரூபாய் செலவில் உருவாகும் படத்தை இயக்கும் தனுஷ்

    எழுதியவர் Arul Jothe
    May 24, 2023
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தறபோது 'கேப்டன் மில்லர்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

    மேலும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.

    படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

    சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தை தனுஷ் இயக்குகிறார் என்ற செய்தியை கேட்டு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    Dhanush's D50

    தனுஷின் 50வது படம்

    அப்படத்தில் விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் என பலரும் நடிக்க உள்ளனர்.

    இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளனர் என்ற செய்தி கிசுகிசுக்கப்படுகிறது.

    ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

    இது தனுஷின் 50வது படம் என்பதால் 100 கோடி ரூபாய் செலவழித்து தயாரிக்கிறார்கள்.

    தனுஷ் இந்த படத்தின் திரைக்கதையை, வட சென்னையை மையமாக வைத்து அமைத்துள்ளாராம்.

    தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தை போல இருக்குமோ என்று சிலர் யோசிக்கிறார்கள்.

    மேலும் எப்போது வெளியாகும் என்ற தகவலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தனுஷ்
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தனுஷ்

    தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்களா? எஸ்.ஜே.சூர்யா
    தனுஷின் 'வாத்தி ' படத்தின் அடுத்த பாடலான 'நாடோடி மன்னன்' வெளியானது பாடல் வெளியீடு
    தனுஷின் 50 -வது படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்பட அறிவிப்பு
    தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது திரைப்பட அறிவிப்பு

    தமிழ் திரைப்படம்

    மற்றுமொரு முக்கோண காதல் கதையா? லைக்காவின் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம் திரைப்பட அறிவிப்பு
    சிறுத்தை படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி வளந்துட்டாங்க? வைரல் ஆகும் புகைப்படங்கள் ட்ரெண்டிங் வீடியோ
    பொன்னியின் செல்வன்-2 படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு சிறப்பு விருந்தினராக கமல் பங்கேற்கிறார்! பாடல் வெளியீடு
    கார்த்தி-நலன் குமாரசாமி படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் துவக்கம் கார்த்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025