சமந்தாவின் பெயர், குரலை அனுமதியின்றி பயன்படுத்த தடை: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான சமந்தா ரூத் பிரபு அவர்களின் பெயர், புகைப்படங்கள், குரல் மற்றும் ஆளுமைப் பண்புகளை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாகவும் விளம்பர நோக்கங்களுக்காகவும் பயன்படுத்துவதற்கும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச மற்றும் அவதூறு டீப்ஃபேக் வீடியோக்களைப் பரப்புவதற்கும் இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், இணையத்தில் சட்டவிரோதமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அத்தகைய அனைத்து உள்ளடக்கங்களையும் உடனடியாக நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டீப்ஃபேக் வீடியோக்களுக்கு எதிரான மனு
நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு
இந்த மனு நீதிபதி மாதவ் ஜம்தார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சமந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவரது அனுமதி பெறாமல் செயற்கை நுண்ணறிவு மற்றும் மார்பிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆபாசமான மற்றும் தவறான காணொளிகள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுவதாக வாதிட்டார்.
இது நடிகையின் தனிப்பட்ட நற்பெயருக்கும் ஆளுமைக்கும் களங்கம் விளைவிக்கும் செயல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி மாதவ் ஜம்தார், நடிகை சமந்தாவின் பெயர், புகைப்படம், குரல் மற்றும் தனித்துவமான ஆளுமைத் தன்மைகளை அவரது முன் அனுமதியின்றி வணிக ரீதியாகவோ பிற நோக்கங்களுக்காகவோ பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், இணையத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனுமதியற்ற டீப்ஃபேக் வீடியோக்களை உடனடியாக நீக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.