Page Loader
அப்பா-மகன் என இருவருடனும் ஜோடியாக நடித்த பிரபல  நடிகைகள்
நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் அவரின் மகன் பிரபுவின் புகைப்படம்

அப்பா-மகன் என இருவருடனும் ஜோடியாக நடித்த பிரபல நடிகைகள்

எழுதியவர் Saranya Shankar
Jan 06, 2023
02:05 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் பொற்காலமாக 60-70 கால கட்டங்கள் இருந்தன. அதிலும் நடிப்பு என்றாலே நமக்கெல்லாம் ஞாபகம் வரும் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள். நாடக மேடையில் சிவாஜியாக நடித்து அந்த பாத்திரத்தோடு ஒன்றிப்போனதை பாராட்டி பெரியார் அவர்கள் இவருக்கு சிவாஜி என்னும் பட்டத்தை கொடுத்தார். அன்று முதலல் இவர் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டார். தமிழ் திரையுலகில் ஜாம்பவானாக பார்க்கப்பட்ட சிவாஜி கணேசன் பல படங்களில் நடித்துள்ளார். அவ்வாறு 1985-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான படம் முதல் மரியாதை. இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ராதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். நடிகை ராதா இந்த கதாபாத்திற்காக இன்றளவும் பேசப்பட்டு வருகிறார்.

சகோதரி நடிகைகள்

ராதாவும்..அம்பிகாவும்..!

சிவாஜியுடன் சேர்ந்து நடித்த நடிகை ராதா இதன் பிறகு அவரின் மகனான பிரபுவுடனும் இணைந்து அண்ணா நகர் முதல் தெரு, ஆனந்த் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி 1985-ல் பாரதி வாசு இயக்கத்தில் வெளியான நீதியின் நிழல் என்ற படத்தில் அப்பா மற்றும் மகனாகிய சிவாஜி கணேசன், பிரபு ஆகிய இருவரிடமும் சேர்த்து நடித்தார். இவரை தொடர்ந்து ராதாவின் சகோதரியான அம்பிகா அவர்களும் சிவாஜி கணேசன் மற்றும் பிரபு ஆகிய இருவருடனும் ஜோடியாக நடித்துள்ளார். 1984-ல் சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வாழ்க்கை படத்தில் இவர் சிவாஜிக்கு ஜோடியாக நடித்து இருப்பர். இதன் பிறகு இவர் பிரபுவுக்கு ஜோடியாக தலைமகன் வெள்ளை ரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.