NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வரும்..ஆனா வராது..குழப்பத்தை விளைவித்த நடிகர் விஷாலின் அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    வரும்..ஆனா வராது..குழப்பத்தை விளைவித்த நடிகர் விஷாலின் அறிக்கை
    விஜயை தொடர்ந்து விஷாலும் அரசியலுக்கு வருவார் என நேற்று செய்தி வெளியானது

    வரும்..ஆனா வராது..குழப்பத்தை விளைவித்த நடிகர் விஷாலின் அறிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 07, 2024
    12:01 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் விஷால் அரசியலுக்கு வரவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், அதை மறுப்பது போன்ற அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார் விஷால்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்" என குறிப்பிட்டுள்ளார்.

    விஷால் அறிக்கை 

    நற்பணி தொடரும் என குறிப்பிட்ட விஷால் 

    "'தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்"

    "தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்" என விஷால் குறிப்பிட்டுள்ளார்.

    விஷால் ஏற்கனவே ஒரு முறை சட்டசபை தேர்தலில் நிற்கப்போவதாக கடைசி நிமிடத்தில் அறிவித்தார். எனினும் அவரின் விண்ணப்பத்தில் தவறு இருந்ததால் அது நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    நடிகர் விஷாலின் அறிக்கை

    அன்புடையீர் வணக்கம் pic.twitter.com/WBkGmwo2hu

    — Vishal (@VishalKOfficial) February 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஷால்
    அரசியல் நிகழ்வு

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    விஷால்

    இயக்குநர் ஹரி-இசைமைப்பாளர் DSP கூட்டணியில் நடிகர் விஷாலின் 34வது படம் இசையமைப்பாளர்
    நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் விஷால்  திருமணங்கள்
    'மார்க் ஆண்டனி' படத்தின் 2ம் சிங்கிள் 'ஐ லவ் யூ டி' - இணையத்தில் ரிலீஸ் பாடல் வெளியீடு
    மார்க் ஆண்டனி: சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் நடிகை யார் எனக்குழம்பும் ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யா

    அரசியல் நிகழ்வு

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! தமிழ்நாடு
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025