LOADING...
ஓடிடி உலகில் மிகப்பெரிய ஒப்பந்தம்: 72 பில்லியன் டாலருக்கு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய Netflix
72 பில்லியன் டாலருக்கு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய Netflix

ஓடிடி உலகில் மிகப்பெரிய ஒப்பந்தம்: 72 பில்லியன் டாலருக்கு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய Netflix

எழுதியவர் Venkatalakshmi V
Dec 05, 2025
06:16 pm

செய்தி முன்னோட்டம்

உலகளாவிய ஓடிடி தளங்களில் முன்னணி நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ், ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு மற்றும் பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவான் நிறுவனமான Warner Bros. நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மதிப்பு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்புள்ள சுமார் ₹6 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பொழுதுபோக்குத் துறையில் முன்னணி நிறுவனங்களான Netflix மற்றும் வார்னர் பிரதர்ஸ் ஆகிய இரண்டும் இணைவது, உலகளாவிய ஊடக மற்றும் உள்ளடக்க சந்தையில் ஒரு மிகப் பெரிய அதிகாரக் குவிப்பை ஏற்படுத்தும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஹாரி பாட்டர், டிசி சூப்பர் ஹீரோக்கள் போன்ற வார்னர் பிரதர்ஸின் பிரம்மாண்ட திரைப்பட மற்றும் தொடர் உள்ளடக்க நூலகம் நெட்ஃபிலிக்ஸின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement