இயக்குநர் சிம்புதேவன் - விமல் கூட்டணியில் உருவாகியுள்ள 'நவோரியா' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
'இம்சை அரசன் 23-ம் புலிகேசி', 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' உள்ளிட்ட வித்தியாசமான திரைப்படங்களை இயக்கிய சிம்புதேவன், தற்போது நடிகர் விமல் நடிப்பில் 'நவோரியா' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ள நிலையில், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது. விமலுடன் ஆரி அர்ஜுனன், தம்பி ராமையா, வடிவுக்கரசி, பால சரவணன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்கள் வெளியீடு
வெளியீட்டுத் தேதியோடு சேர்த்து படத்தில் இடம்பெற்றுள்ள முக்கியக் கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அதன்படி, நடிகர் விமல் 'ஆதி' என்ற கதாபாத்திரத்திலும், அன்ஷீத்தல் 'அபி' என்ற கதாபாத்திரத்திலும், ஆரி அர்ஜுனன் 'கவுதம் ராஜேந்திரன்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருப்பது தெரியவந்துள்ளது.
வித்தியாசமான கதைக்களத்துடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புதேவனின் தனித்துவமான படைப்பாக வெளிவரவுள்ள 'நவோரியா' திரைப்படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
INTRODUCING.. Adhi.. Abi.. GowthamaRajarajan..
— Chimbu Deven (@chimbu_deven) November 23, 2026
From the world of NAVORIA
💥In cinemas from 18th DECEMBER
Producer @tpcdreamhouse@ActorVemal @Aariarujunan @annsheetal1 @Bala_actor
A @immancomposer Musical @dopmsukumar @sreejithsarang@silvastunt @SaktheeArtDir @onlynikil pic.twitter.com/HDVNEW2d66