Loading...
திருவண்ணாமலையில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் சக்தியை உணர்ந்தேன்! நடிகர் வெங்கடேஷ் நெகிழ்ச்சி
திருவண்ணாமலையில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் சக்தியை உணர்ந்ததாக நடிகர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் சக்தியை உணர்ந்தேன்! நடிகர் வெங்கடேஷ் நெகிழ்ச்சி

எழுதியவர் Vasuki
Nov 24, 2026
05:09 pm

செய்தி முன்னோட்டம்

சினிமாவில் எவ்வளவுதான் வெற்றி, புகழ் மற்றும் பணம் கிடைத்தாலும், ஒரு கட்டத்தில் மனதுக்குள் இருக்கும் கவலைகளுக்கு பதில் கிடைக்காமல் தான் தவித்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் வெங்கடேஷ் மனம் திறந்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஆன்மீக அனுபவம் குறித்துப் பேசிய அவர், மிகுந்த மன உளைச்சலில் இருந்த தனக்கு எங்கும் சரியான தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறினார். கடைசியாக திருவண்ணாமலைக்கு சென்றபோதுதான் தனது அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கிடைத்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கடவுள் சக்தி

மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் சக்தியை உடலுக்குள் உணர்ந்தேன்

திருவண்ணாமலை ஆலயத்திற்கு சென்று தியானம் செய்து மனதார வழிபட்டபோது, தனக்குள் இருந்த சக்தியையும் மனவலிமையையும் உணர்ந்ததாக வெங்கடேஷ் உருக்கமாகக் கூறியுள்ளார்.

"அங்கு வந்து தியானம் பண்ணினேன், மனதாரக் கும்பிட்டேன். எனக்குள்ள ஏதோ ஒரு சக்தி பலம் என்னோட உடம்புக்குள்ள இறங்குறதை நானே உணர்ந்தேன்".

"மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு கடவுள் சக்தியை நான் அந்த இடத்தில் உணர்ந்தேன்" என அவர் பகிர்ந்துள்ளார்.

இந்தப் புனித அனுபவம் வெறும் கோயில் பயணமாக மட்டுமின்றி, வாழ்க்கையைப் பார்க்கும் தனது பார்வையையே முற்றிலுமாக மாற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் பேச்சு

வெற்றி, தோல்விகளை சமமாகப் பார்க்க உதவிய ஆன்மீகம் 

தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தபோதும் மன அமைதி இல்லாமல் தவித்த தனக்கு, ஆன்மீகப் பாதையே சரியான வழிகாட்டியாக அமைந்ததாக வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

சினிமாவின் வெற்றி, தோல்விகள் இரண்டையும் ஒரே மனநிலையுடன் கையாள இந்த ஆன்மீகப் பார்வை தனக்குப் பெரிதும் உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

சினிமா புகழுக்கு அப்பால் ஒரு மனிதனின் ஆன்மீகத் தேடலை வெளிப்படுத்தும் நடிகர் வெங்கடேஷின் இந்த உருக்கமான பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி, பக்தர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ADVERTISEMENT