LOADING...
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை, திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 02, 2025
07:47 pm

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் உருவான Ditwah புயல் வலுவிழந்தாலும், அதன் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை KTCC மாவட்டங்களை கடந்த 2 நாட்களாக திணறடித்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடதமிழகம் - புதுவை கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த சூழலில், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கக்கப்பட்டுள்ளதாக News18 செய்தி வெளியிட்டுள்ளது. இன்று ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement