LOADING...
AI தெரியாவிட்டால் புரமோஷன் கிடையாது! IT ஊழியர்களுக்கு Accenture போட்ட புது ரூல்
IT ஊழியர்களுக்கு Accenture போட்ட புது ரூல்

AI தெரியாவிட்டால் புரமோஷன் கிடையாது! IT ஊழியர்களுக்கு Accenture போட்ட புது ரூல்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2026
03:43 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேலை செய்யும் முறையை மாற்றி வரும் நிலையில், அதை சரியாக பயன்படுத்த தெரியாதவர்களுக்கு பணி உயர்வு வழங்கப்படாது என்று Accenture நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அசோசியேட் டைரக்டர்கள் மற்றும் சீனியர் மேலாளர்கள் போன்ற உயர் பதவிகளுக்கு பணி உயர்வு பெற வேண்டுமானால், அவர்கள் தினசரி வேலைகளில் ஏஐ கருவிகளை தவறாமல் பயன்படுத்துவது அவசியமாக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

கண்காணிப்பு முறை

ஊழியர்கள் ஏஐ கருவிகளை பயன்படுத்துகிறார்களா என்பதை நிறுவனம் தீவிரமாகக் கண்காணிக்கும். குறிப்பாக NVIDIA உடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'AI Refinery' போன்ற உள்நாட்டு ஏஐ தளங்களில் ஊழியர்கள் எவ்வளவு முறை 'லாக்-இன்' செய்கிறார்கள் என்பது கணக்கிடப்படும். இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026-இல் பேசிய அக்ஸென்சர் சிஇஓ ஜூலி ஸ்வீட், "மாற்றத்திற்குத் தயாராக இல்லாத ஊழியர்கள் வெளியேற வேண்டியிருக்கும்" என்று மறைமுகமாக எச்சரித்துள்ளார். ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பத்திற்கு மாற முடியாத 11,000 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டி

மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளின் நிலை

அக்ஸென்சர் மட்டுமல்லாது மைக்ரோசாப்ட் நிறுவனமும் "ஏஐ பயன்பாடு என்பது இனி விருப்பத்தேர்வு அல்ல, அது கட்டாயம்" என்று தனது ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது. கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களும் ஏஐ பயன்பாட்டை ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீட்டில் (Performance Review) சேர்த்துள்ளன. இருப்பினும், இந்த விதிமுறை அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தாது. ஐரோப்பாவில் உள்ள 12 நாடுகள் மற்றும் அமெரிக்க அரசாங்க ஒப்பந்தங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ காரணங்களால் இந்த ஏஐ கட்டாய விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement